பொறாமை கொண்டவர்கள்
உங்களை பற்றி
எப்போதும் பேசுவார்கள்
ஆனால் உங்கள் உயரத்தை
அவர்கள் எட்ட முடியாது

நம்மை
நேசிப்பவருக்கு
வார்த்தைகள் மட்டுமல்ல
மௌனம் கூட
புரியும்

நம்முடைய கனவுகளை
நம்மை தவிர
வேறு யாரும் நிஜமாக்க முடியாது
அதனால் நாமே போராட வேண்டும்

வாழ்க்கை என்பது
ஒரே ஒரு முறை
கிடைக்கும் சலுகை
அதை கவனமாக
செலவழி

நாளைய வாழ்க்கையை
வாழ்ந்து விட
இன்றைய வாழ்க்கையை
சரியாக வாழ வேண்டும்

கஷ்டங்கள் வந்து கொண்டே
தான் இருக்கும் நாம்
கடந்து சென்று கொண்டே
இருப்போம் சோர்ந்து விடாதே
சோர்ந்து இருந்து விடாதே

ஒரு பிரச்சனை என்றால்
சூழ்நிலை மட்டும் நினைக்காதீர்கள்
சில நாய் வேஷமிட்ட நரிகளின்
சூழ்ச்சியாக கூட இருக்கலாம்
என்பதை மறக்காதீர்கள்

புரிந்து
கொள்ளப்படாததை விட
வேதனையானது
தவறாய் புரிந்து
கொள்ளப்படுவது

உங்களிடம்
எப்படி மற்றவர்
நடந்து கொள்ள
வேண்டுமென
நீங்களே தான்
கற்றுக் கொடுக்கிறீர்கள்

தயங்கி நிற்பவர்கள்
ஒரு போதும் தங்களுக்கு
தகுதியான இடத்திற்கு
சென்று சேர்வதே இல்லை