மாற்றங்கள் யாவும் காயத்தின் முடிவிலே தொடக்கம் பெறுகின்றது
அன்பை வெளிப்படுத்த தேவையில்லை உணர செய்தால் போதும்
சில துன்பங்கள் காற்றைப் போல உருக்கொள்ள முடியாது ஆனால் தாக்கும்
வெற்றி பெறுவோர் வாய்ப்பை காத்திருப்பதில்லை உருவாக்குவார்கள்
மௌனத்தில் மறைந்திருக்கும் வலிகள் கூட காலத்தின் கருணையால் ஆறிவிடும்
தெரியாத சோகத்தை உள்ளுக்குள் வைத்து மற்றவருக்கு காட்டிடும் மகிழ்ச்சி மட்டுமே நிலையானது
நல்லவர்களை காயப்படுத்தினால் சரிக்கு சரியாக நின்று சண்டையிட மாட்டார்கள் ஆனால் அமைதியாக அவர்களை விட்டு வெகு தூரம் விலகி சென்று விடுவார்கள்
உண்மையான அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாதது அது உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயலாலும் உணர்த்தப்படுவது
நாம் கற்ற வழியை ஒருவருக்கு கொடுத்த போது அது அவருக்கு திசை காட்டினாலும் அவர் அந்த வழியையே நமக்கு எதிராக பயன்படுத்தும் போது வாழ்க்கை ஒன்றை உணர்த்துகிறது யாரையும் கண்மூடித்தனமாக நம்ப கூடாது என்று
எல்லாமே சில காலம் தான் என தெரிந்தும் கூட எதிர்பார்ப்புகள் மட்டும் குறைவதில்லை இங்கு