நண்பர்கள் என்றால்
வாழ்வின் எல்லா
சந்தோஷங்களையும்
பகிர்ந்து கொள்ளும்
அன்பான உறவுகள்

முயற்சியில் சோர்வடையலாம்
ஆனால் முயற்சியை
நிறுத்தினால் தான்
தோல்வி உறுதி

நம்பிக்கையே மனிதனுக்கு
நேரும் சகல நோய்களுக்கும்
ஒரே மலிவான மருந்து

நட்புக்கு அளவில்லை
என்றாலும்
அளவோடு இருந்தால்
நலமாகும் நட்பு

அப்பாவின்
அன்பை விட சிறந்தது
இந்த உலகில்
எதுவும் இல்லை

அனுபவம் கற்றுக் கொடுக்கும்
பாடங்கள் புத்தகங்களில் கிடைக்காது

நடக்கும் பாதை
தெரியாமல் இருந்தாலும்
நம்பிக்கையுடன் எடுத்த
ஒரு படி கூட வாழ்க்கையை மாற்றும்

ஊக்கம் ஒருநாள் மூச்சாகிவிடும்
அவசரமின்றி அதை
சுவாசிக்கவும் பழகு

வாழ்க்கை என்பது
ஓர் ஓவியம் போல
நிறத்தை நாம்தான்
தேர்ந்தெடுக்க வேண்டும்

சூழ்நிலை சாதகமாக
இருக்க வேண்டும் என்று
காத்திருக்காதே
நீ முதலில் சாதிக்கத் தொடங்கு
சூழ்நிலை பின்தொடரும்