உன் வெற்றியை கொண்டாடும் உலகம் உன் வலியை புரிந்துகொள்ளாது அதனால் வலியைப் புன்னகையோடு கடந்து செல்
நம்மளோட பலம் பலவீனம் ரெண்டுமே நமக்கு புடுச்சவங்களோட அன்பு தான்
வாழ்க்கையில் நம்மை விட சிறப்பா பலர் வாழலாம் ஆனால் நம்ம வாழ்க்கையை நம்மை விட சிறப்பா யாராலையும் வாழ்ந்து விட முடியாது
பிழைகள் உணராத வரை எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை எதிலும்
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும் கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்று விடலாம் (by அப்துல்_கலாம்)
கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும் அதனை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும் நம்மிடம் தான் உள்ளது நிரந்தரமாக்கினால் நீ நோயாளி தற்காலிகமாக்கினால் நீ புத்திசாலி
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
ஒவ்வொரு நிழலும் ஒரு ஒளியின் கதை சொல்லும் வாழ்க்கையும் அதைப் போலதான்
வாழ்க்கையில் அதிகம் பேசாதீர்கள் இல்லையெனில் வேண்டியவருக்கு கூட வேண்டாதவர்கள் ஆகிவிடுவீர்கள்
தோல்வி முடிவு அல்ல அது வெற்றிக்கு வரும் முன்னோட்டம்