தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்

தோல்வி வந்தால் ஓடாதே
காரணம் தேடிச் செல்

பிறரிடம் பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும் அருவி
தான் கண்ணீர்

மகிழ்ச்சி தற்காலிகம்
ஆனால் சில சோகங்கள்
வாழ்நாள் முழுவதும் தொடரும்

வெற்றி அடைய
முயற்சி தொடங்கும் முன்
தோல்வியை நம்பாதே

வாழ்க்கை இப்படித்தானோ
அப்படி நினைக்கையில்
எப்படி வேண்டுமானாலும்
மாறுகிறது வாழ்க்கை

தன் வார்த்தைக்கு
கட்டுப்பட்டு
நடப்பவர்களையே
நல்லவர்கள் என
புகழும் இந்த உலகம்

சோகத்தை மறைத்து
சிரிக்கும் மனம் தான்
உண்மையான போராளி

முடிந்ததை வாழ
நினைப்பவனை விட
முயன்றதை வாழ விரும்புவதே
வாழ்க்கையின் உண்மை

நிமிடங்கள் ஓடிவிடும்
ஆனால் நினைவுகள்
நம்மை ஓட வைக்கும்