இழந்து நிற்பது கூட
முட்டாள்தனம் அல்ல
இழந்ததை எண்ணி
இருப்பதையும்
இழப்பது தான்
பெரிய முட்டாள்தனம்
கடந்து சென்றவை
அனைத்தும்
பாதைகள் அல்ல
நாம் கற்றுக்கொண்ட
பாடங்கள்
துணிச்சல் என்பது
ஒருவரை பேச விடாமல்
செய்வது அல்ல
அனைவரையும்
நம்மை பற்றி
பேச செய்வது
தைரியம் என்பது
பயம் இல்லாமை அல்ல
பயத்தை வெல்லும் வலிமை
வாழ்க்கை ஒரு கடல் மாதிரி
சில நேரம் அலைகள்
நம்மை உயர்த்தி நிறுத்தும்
சில நேரம் கீழே தள்ளும்
ஆனாலும் மிதந்துகொண்டே
இருக்க வேண்டியது
நம்முடைய மனசு
வெற்றி கிடைக்காமல்
இருந்தாலும்
அதற்கு ஏற்ற உழைப்பு
ஒரு வெற்றியே
பிடித்தவைகளுக்கு
நினைவுகள் மட்டுமே
போதுமானதாய் இருக்கிறது
ஒருவரை
நேசிப்பதற்கு முன்பு
அவர்களின் விருப்பங்களையும்
நேசிக்க கற்றுக்கொ‌ள்ளு‌ங்க‌ள்
அதில் தான்
அன்பு நிறைந்திருக்கும்
தன்னை நல்லவர்
என்று யாருக்கும்
நிரூபிக்க ஆசைப்படாமல்
இயல்பாய் இருப்பவரே
உண்மையில்
சிறந்த மனிதன்
விடை தெரிந்த
கேள்விகளுடன்
துணிவதல்ல வாழ்க்கை
விடை தெரியாத
கேள்விகளுக்கும்
விடை சொல்ல
துணிவதே வாழ்க்கை
📖 பக்கம் 199 / 606
📋 Copied