குனிவதால் எழுத்துகள்
நிமிரும் பணிவதால்
வாழ்க்கையும் உயரும்
குனிவதால் எழுத்துகள்
நிமிரும் பணிவதால்
வாழ்க்கையும் உயரும்
கண்களை மூடினால் இருள்
மனதை மூடினால் வெற்றி இல்லை
ஒன்றும் புரியவில்லை
புரியாத விஷயத்தை
புரிய வைக்க
நினைப்பதலோ
புரிந்த விஷயம் கூட
புரியாமல் போகிறது
வெற்றி என்பது உன்னை
உலகிற்கு அறிமுகம் செய்வது
தோல்வி என்பது உன்னை
உனக்கே அறிமுகம் செய்வது
அவர்கள் போல் வாழ்க்கை
இவர்கள் போல் வாழ்க்கை
வாழவேண்டும் என்ற
ஏக்கப்பெருமூச்சில்
நம் வாழ்க்கை வெறுக்கப்பட்டு
வாழாமலேயே முடிக்கப்படுகிறது
நான் நானாக
இதுவரை யாருக்காகவும்
என்னை மாற்றிக்கொள்ளவில்லை
எனக்காக யாரையும்
மாற சொன்னதுமில்லை
வாழ்க்கை நிறைய
கேள்விகளை கேட்கும்
ஆனால் பதில்கள்
நம் செயல்களில் தான் இருக்கின்றன
உறவுகளை தவிக்க விட்டு
தனிமையில்
போன காலம் மாறி
தனிமையில் உறவுகளைத்
தேடித் தவிக்கும்
காலமாகிவிட்டது
காலங்கள் சிலரை
மறக்க செய்துவிடும்
ஆனால்
ஒரு சிலரின்
அன்பு காலத்தையே
மறக்க செய்துவிடும்
நீங்கள் நினைத்ததை
எப்போதும் செய்க
அது உங்கள் வாழ்வின்
திறவுகோலாக மாறும்