காலம் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாத மனம்
கொண்டவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்
காலம் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாத மனம்
கொண்டவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்
நாம் இயற்கையை அடக்க
நினைத்தால் அது நம்மை
அழித்துவிடும்
சில நேரங்களில்
சில இடங்களில்
பார்வையாளர்களராக
இருப்பது மட்டுமே
சாலச் சிறந்தது
தொடர்ந்த முயற்சி என்பது
விதை மாதிரி
நாள் ஒன்றில் பூத்திடும்
மாற்றம் தான்
வாழ்வின் உண்மை
அதனை ஏற்கும்
மனது தான் நிம்மதி
வானைப் போன்ற பெரிய
இன்பங்கள் தேவையில்லை
விண்மீன் போன்ற குட்டி
குட்டி இன்பங்கள் போதும்
வாழ்க்கையை அழகாய் வாழ
அம்பினால்
பட்ட காயம் ஆறும்
அன்பினால்
பட்டகாயம் ஆறாது
நடப்பது மெதுவாக இருந்தாலும்
நிற்காமல் இருக்க வேண்டும்
என்பதே முக்கியம்
கனவின் மிச்சத்தை
உயிர்ப்பிக்க முடியாமல்
உணர்வின்றியே
உதித்துக்கொண்டுதானிருக்கிறது
ஒவ்வொரு விடியலும்
சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்
நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்