ஒவ்வொரு நாள் வாழ்வும்
ஒரு பாடம்
புரிந்து கொண்டால் முன்னேற்றம்
தவிர்த்தால் பின்னடைவு

சோகம் ஒரு நிழல்
அது மறைந்துவிடும்

வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்

இருளிலும் ஒளிவீசும்
ஓவியம் நீ

நாட்கள் கடக்கிறது
தினம் பல
அனுபவங்கள் கிடைக்கிறது
ஆனால் போகும் தூரமும்
போகிற பாதையும்
சூழ்நிலை தான் வகுக்கிறது

மனம் தான் வாழ்வின்
விளைநிலம் அதன்
தன்மையைப் பொறுத்தே
ஒருவரின் வாழ்வு அமைகிறது

காலத்தை வீணாக்கும்
ஒவ்வொரு நொடியும்
வாழ்வின் சுவையை குறைக்கிறது

இல்லாததை
நினைத்து ஏங்காமல்
இருப்பதைவைத்து
வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

விருப்பத்தோடு வாழ்பவர்களை
விட விதி என்று வாழ்பவர்களே
இந்த உலகில் அதிகம்

சிரிப்பு ஒரு தருணம்
ஆனால் அதன் நினைவு
ஆயுள் முழுதும்