நேசிக்க யாரும் இல்லை என யோசிக்க வைக்கிறது வாழ்க்கை நேசிக்க அன்பு வரும்பொழுது அதை நினைக்க மறந்துவிடுகிறது
சிறிய தருணங்களை மதிக்க கற்றுக்கொண்டால் தான் பெரிய நினைவுகள் உருவாகும்
கடக்க போகும் பெறும் பாதையை கண்டு வியக்கும் போது கடந்து வந்த பெறும் பாதையை நினைத்து பாருங்கள்
வாழ்க்கையில் சிலர் எதற்கு வருகிறார்கள் என்றும் தெரியாது சிலர் எதற்கு போகிறார்கள் என்றும் தெரியாது
படிக்க முடியாத புத்தகம் போல் சில மனங்கள் சோகத்தில் மூடப்படுகின்றன
மதிப்பும் மரியாதையையும் பிறர் கொடுக்கும் போது தற்பெருமையையும் அகங்காரத்தையும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால் எல்லாமே பூஜ்யமாகிவிடும்
நிம்மதி கிடைப்பது சூழ்நிலையில் இல்லை பார்வையில்
குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளை மட்டும் கவனம் செலுத்துங்கள்
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை அதே போல் தான் வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது
நம் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்து கொண்டால் போதும் அமைதி கிடைக்கும்