தவறு செய்யாதவனையும்
நடுக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது
(குளிர்)
வாழ்க்கை எப்போதும்
சிரிப்பால் நிரம்பாது
ஆனால் சவால்களை
ஏற்கும் மனம் இருந்தால்
அது அர்த்தமுள்ளதாகும்
சின்ன வெற்றிக்கு
பெரும் ஆரவாரம் வேண்டாம்
பெரும் வெற்றிக்கு
சின்ன முயற்சிகள் போதும்
பெண்ணின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து
பெண்ணாக மதிக்கும்
ஆண் கிடைப்பது வரம்
மறந்து விட்டேன்
நமக்கு நாமே
சொல்லிக்கொள்ளும்
சமாதானம்
வாழ்க்கை என்பது போட்டி அல்ல
பயணம். ஒவ்வொரு அடியும்
அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்
என் தலையணைக்கு
தாகம் போல
தினமும் கண்ணீரை
கடனாக கேட்கிறதே
மகிழ்ச்சி என்பது
பணம் சார்ந்தது அல்ல
மனம் சார்ந்தது
விபரம் தெரிந்த பிறகு
தான் தெரிகிறது விபரம்
தெரியாத வயதில் வாழ்ந்த
அந்த வாழ்க்கை தான்
சொர்க்கம் என்று
தடைகள் நம்மை சோதிப்பவை
அவற்றை எதிர்கொள்வதே ஆற்றல்
📖 பக்கம் 180 / 606
📋 Copied