எதிர்பார்த்த அனைத்தும்
எதிர்பார்த்தவரிடம் இருந்து
தமக்கு கிடைப்பதில்லை

நம்பிக்கை உடையவன்
புயலிலும் பாதை காண்பான்

உங்கள் வலிமை
உங்கள் நம்பிக்கையில் இருக்கிறது
அதை தவிர்க்காதீர்கள்

பொறாமை கொண்டவர்கள்
உங்களை விமர்சிக்க
மட்டுமே தெரியும்
ஆனால் உங்களை வெல்ல முடியாது

தோல்வியின் இடைவெளி
வாழ்க்கையின் பாடப்புத்தகம்
வாசித்தால் புரிந்துகொள்ள முடியும்

சிரமங்கள் வந்தால்தான்
திறமைகள் விழித்தெழும்

எதிர்பார்க்காமல் பழகிப்பார்
எல்லோரையும் பிடிக்கும்

வலி என்பது
காணாமல் போகாது
ஆனால் அதை சமாளிக்கலாம்

ஒருமுறை உதிர்ந்து
விட்டால் மறுமுறை
அதே அளவில்
பூப்பது இல்லை
நம்பிக்கை

தோல்வியை எரிவாயுவாக
பயன்படுத்தும் மனிதன் மட்டுமே
வெற்றியின் ராக்கெட்டில்
ஏறி பறக்க முடியும்