துவக்கம் எப்படியிருந்தாலும்
முடிவை நாம்தான்
உருவாக்க முடியும்
வாழ்க்கை ஓட்டமில்லை
அது ஓய்வில் நமக்குள்
ஓடும் பயணம்
போராட்டத்துடன்
கூடியதே இல்வாழ்க்கையில்
போராட்டம் ஒன்றே நிரந்தரம்
இதுவும் கடந்து
போகும் ஆனால்
எதுவும் மறந்து போகாது
தனக்கென
ஒரு பாதையை
உருவாக்கிக் கொள்ள
முனைந்தவன்
பயணத்தில் வரும்
தடங்கல்களை கண்டு
துவண்டு விடாமல்
எவ்வளவு இடர்ப்பாடுகளையும்
கடந்து முன்னேற
மட்டுமே துடிப்பான்
பாதையும் நமதே
பயணமும் நமதே
வாழ்க்கையும் நமதே
வெற்றியும் நமதே
சோகங்களை மறச்சிகிட்டு
எதுவுமே இல்லாத மாரி
சிரிச்சு பேசுறதுக்கும்
தனி திறமை வேணும்
தோல்வியை எரிவாயுவாக
பயன்படுத்தும் மனிதன் மட்டுமே
வெற்றியின் ராக்கெட்டில்
ஏறி பறக்க முடியும்
ஒரு முயற்சி தோல்வியடைந்தால்
அதற்கு பதிலாக
பத்து முயற்சி பிறக்க வேண்டும்
சில கண்ணீர்கள் சொல்வதற்கு
வார்த்தைகளே தேவையில்லை
முயற்சிக்காமல் காத்திருப்பவன்
அதிர்ஷ்டத்தை குறை கூறுவான்
முயன்றவன் வெற்றியை கொண்டாடுவான்
📖 பக்கம் 174 / 606
📋 Copied