கடைசி வரை போராடுபவர்கள்தான்
இறுதியில் வெற்றி பார்க்கிறார்கள்

தேவைக்காக பழகும்
நண்பர்களை விட
பலி தீர்க்கும் எதிரிகளே
மேலானவர்கள்

கொடுப்பவன் இறைவன்
என்பதை உணர்ந்து
கொண்டால் கிடைப்பது
எதுவும் தாழ்வாகத் தெரியாது

நிரந்தரம் என்று
எதுவும் இல்லை
இன்று உனக்குள் இருக்கும்
பிரச்சனையும் கூட

கண்ணீர் என்பது
இதயத்தின் ரகசிய மொழி

மறைக்க நினைக்கும்
மனிதர்களிடம் மறந்தும்
மயங்கிவிடாதீர்கள்

மனம் எதையும்
யோசிக்க முடியாதபடி
வெறுமையில் வாடும்
நேரங்களில் இசையே அந்த
வெற்றிடத்தை நிரப்புகிறது

தனி ஒருவனாய் போராடி
கரை சேர்ந்த பின் திமிராய்
இருப்பதில் தப்பில்லை

உழைப்பின் சுவை
வெற்றியின் இனிப்பை முந்தும்

உங்கள் உள்ளத்தில்
மறைந்துள்ள சக்தியை
உணருங்கள்
நம்பிக்கை இழந்தாலும்
உங்கள் மனதின்
வலிமையால் மீண்டும்
எழுந்து நிற்க முடியும்