சோகத்தின் பாரம்
நேரடியாக பாராட்டாக
மாறும் நாள் வரும்

காதல் என்னும் மழையில்
நனையாதவர்களும் இல்லை
பிரிவு என்னும் துயரை
அறியாதவர்களும் இல்லை

இன்று நாம்
பேசநினைக்கும் கருத்துக்களை
சிலர் உனக்கு
என்ன தெரியும் என்று
நம்மை தடுத்துவிடுவார்கள்
அதற்கு வருந்தாதீர்கள்
காலத்தின் வட்டத்தை
நம்புங்கள்
அந்நாள்
நம் கருத்துக்கள் தான்
கை ஓங்கி நிற்கும்

தடைகள் வந்தால்
அது மனம் பலமடையும்
வாய்ப்பு என புரிந்து கொள்

வார்த்தைகளை சிதறவிடாதே
பிறகு
நீ வள்ளுவராகவே
ஆனாலும்
யாரும் உன்னை
கவனிக்க மாட்டார்கள்

பொய்யான அன்பு
பொழுதுபோக்கு பேச்சு
தேவைப்படும் போது தேடல்
இதுதான் இங்கே பலரது
வாழ்க்கை

வலிகளை
ஏற்றுக்கொண்டால்தான்
வாழ்க்கை அழகாகும்

சிறிய மாற்றங்களிலிருந்தே
வாழ்க்கையின்
பெரிய எதிர்காலம் உருவாகும்

வாழ்க்கை என்பது
எதிர்காலத்துக்கான
போராட்டம் அல்ல
வாழும் தருணங்களை
உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது
கடந்தகாலத்தை நினைத்து
வருந்துவதை விட
எதிர்காலத்தை எதிர்கொள்வது
சாலச்சிறந்தது

புதுமைகள் புகுந்து
விட்டால் பழைய
உறவுகள் தூக்கி
எறிய படுகிறது