எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்
மதிப்பவர்களை
மனதில் நிறுத்து
உன்னை மிதிக்க
நினைப்பவர்களை
காலடியில் கிடத்து
சொல்லத் தெரியாத
வயதில் சத்தமாகவும்
சொல்லத் தெரிந்த
வயதில் மௌனமாக
மனதிற்குள்ளும்
அழுது கொள்கிறோம்
புரிதல் என்பது
அன்பானவர்களின்
புன்னகையையும் மனதையும்
அறிவதிலும் தான் உள்ளது
பிறர் நம்பாவிட்டாலும்
பரவாயில்லை
நீ உன்னை நம்பு
நம்மை அலட்சியமாக
நினைப்பவர்களை
விட்டு துணிந்து விலகுங்கள்
நம்மை பொக்கிஷமாக
நினைப்பவர்கள் இருப்பார்கள்
அவர்களுடன் இணைந்து
பயணத்தை தொடருங்கள்
வாழ்க்கை நலம் பெறும்
சூழ்நிலைகள் மாறும்போது
சிலரது வார்த்தைகளும் மாறும்
வாழ்க்கையும் மாறும்
உன் சிறந்த
எழுத்துக்களை எழுது
அதன் மூலம்
உன் உணர்வுகள் மகிழும்
நீயே உன் சக்தியை நம்பினால்
உலகம் உன் வெற்றியை நம்பும்
எப்படியெல்லாமோ
வாழ வேண்டும்
என ஆசைப்பட்டு
ஒரு கட்டத்தில் எப்படியாவது
வாழ்ந்தால் போதும் என்ற
மனநிலையில் தள்ளிவிடப்படுகிரோம்
📖 பக்கம் 17 / 606
📋 Copied