வலி சொல்ல முடியாத போது
அதில் கவிதை எழுதப்படுகிறது
வலி சொல்ல முடியாத போது
அதில் கவிதை எழுதப்படுகிறது
வலி வந்தால்
உடைந்து போவதை விட
அதை சகிப்பதே
வாழ்க்கையை
அழகாக மாற்றும் துணிவு
என் பாதையில் ஆயிரம்
தடுமாற்றம் வரலாம்
ஆனால் என் பயணம்
என்றும் தடம்மாறாது
பிடிக்கும் வரை பொக்கிஷம்
வெறுக்கப்பட்டால் வெறும்
குப்பை பொருட்கள்
மட்டுமல்ல உறவுகளும் தான்
நேற்று செய்யாததை
இன்று செய்தால்தான்
நாளை மாற்றம் இருக்கும்
கடல் போல
பெரிய சந்தோஷங்கள்
தேவையில்லை
கால் நனைக்கும்
அலை போல
சின்ன சின்ன
சந்தோஷங்கள் போதும்
தனிமையின் இரவு
சோகத்தின் மிக நீளமான நிழல்
பிறக்கும்
ஒவ்வொரு விடியலும்
புது முயற்சியும்
புத்துணர்ச்சியுமாகத்
துவங்கட்டும்
வாழ்க்கையில்
இக்கட்டான சூழ்நிலையில்
தள்ளப்படும்போதுதான்
சிலரரின் சுய ரூபம்
வெளிப்படுகின்றது
உதவி என்று அவர்களிடம்
கையேந்தும்போது
நரிகளுக்கு மத்தியில் வாழும்
போது சில சமயம் கர்ஜனை
செய்து தான் சிங்கமென
நிரூபிக்க வேண்டியுள்ளது