நம்மை
மாற்றத் துடிப்பவர்களிடம்
கொஞ்சம் அன்பாக
பழகிப் பாருங்கள்
தங்களை மறந்து
அவர்கள் உங்களுக்காக
மாறி இருப்பார்கள்
ஏனெனில் மாற்றம்
ஒன்றே மாறாதது

நம்மை யார்
என்று நமக்கே தெரியப்படுத்த
தேவைப்படும் ஒன்று தான்
அவமானம்

தேடியது கிடைத்ததும் இல்லை
கிடைத்தது நிலைத்ததும் இல்லை

பூக்களைக்கொண்டு
தரையமைப்பேன்
உன் பிஞ்சுமென்
பாதங்கள் குதித்தோட

அடிபடுவோம் என்று
தெரிந்தே சில
இடங்களில் அன்பானது
துளிர்விடுகிறது

வாழ்க்கை
ஒரு புத்தகம் போன்றது
ஒவ்வொரு பக்கமும்
ஒரு பாடமாக இருக்கும்

வெற்றி கிடைக்கும்போது மட்டும்
உலகம் பாராட்டும்
ஆனால் தோல்வியில்
நீங்கள் உங்களை
நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்

தொடங்காத முயற்சியே
தோல்வியின்
உண்மையான காரணம்

தடைகளை எண்ணினால்
பயம் வரும்
தாண்டுவதை எண்ணினால்
பாதை தெரியும்

வெற்றியை அடைய
விரைவான பாதை எதுவுமில்லை
ஆனால் தொடர்ந்து நடக்கும்
காலடிகள் மட்டுமே அதை அணுகும்