✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சில உறவுகள் வாடகை
வீடு போன்றது எவ்வளவு தான்
நாம் அன்பு செலுத்தினாலும்
அவர்களுக்கு தற்காலிகமே
content_copy
நேரமும் வாய்ப்பும்
எல்லோருக்கும் எப்பொழுதும்
இருந்து கொண்டே தான்
இருக்கின்றன
முயற்சி எடுப்பவர்கள்
மட்டுமே தாங்கள் நினைத்ததை
அடைகின்றனர்
content_copy
நிம்மதியை தேடாதே
மனதை அமைதியாக வைத்துக் கொள்
அது தானாக வரும்
content_copy
பழகியதற்கான
பலனை அடைந்தவுடன்
சிலர் விலகுவதற்கான
காரணங்களை
தேடுகின்றனர்
content_copy
கடைசி வரை நம்பிக்கை
இழக்காதே ஏனெனில்
கடைசி வரியில் கூட
உனக்கான வெற்றி
எழுதப்பட்டிருக்கலாம்
content_copy
வாழ்க்கையில் எது ஒன்று
அதிக இன்பத்தை தருகின்றதோ
அதுவே சில வேளைகளில்
அதிக துன்பத்தையும் தரும்
content_copy
நாளை என்ன கொடுக்கும்
என்று பயப்படாமல்
இன்று என்ன தருகிறது
என்று ரசிக்க கற்றுக்கொள்
content_copy
போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும்
போர்க்களமல்ல
அது பூ வனம்
ரசித்து வாழ்வோம்
content_copy
துன்பமும் ஏழ்மையும்
போதிப்பது போல்
வேறொன்றும்
போதிக்க முடியாது
content_copy
மலையின் உச்சியில்
இருந்து விழுந்தாலும்
எனக்கு மரணமில்லை
இப்படிக்கு நீர்வீழ்ச்சி
📖 பக்கம் 164 / 606
arrow_back
arrow_forward
📋 Copied