வாசம் கொண்ட
மலர்கள்
பூந்தோட்டத்திற்கு அழகு
பாசம் கொண்ட உறவுகள்
வாழ்க்கை
தோட்டத்திற்கு அழகு

வெறுக்கும் கண்கள்
நம்மை வேடிக்கை பார்க்கட்டும்
புன்னகையுடன் கடந்து செல்வோம்

வெற்றி பெறுவது எப்படி
என்று யோசிப்பதை விட
தோல்வியடைந்தது எப்படி
என்று யோசித்துப்பார்
நீ கண்டிப்பாக
வெற்றி பெறுவாய்

வலிகள்
அழுகையில் மட்டும் தான்
இருக்க வேண்டும் என்பதில்லை
சில நேரங்களில்
அது போலி
சிரிப்பின் பின்னாலும்
மறைந்து இருக்கும்

தோல்விகளை சமாதானமாக
ஏற்கும் மனமே
வாழ்க்கையை சமநிலையுடன் நடத்தும்

வாழ்வை எண்ணத்தில் அல்ல
அனுபவத்தில் அளக்க வேண்டும்

நட்பு நட்சத்திரம் போல
இருள் சூழும் போது மட்டுமே
அதன் ஒளியின் உண்மையான
மதிப்பு புரிகிறது

பயப்படாமல் நடந்தால் தான்
பாதை விரிவடையும்

எப்போதாவது
கிடைப்பது வாய்ப்பு
அது எப்போதும்
கிடைப்பது வியப்பு
வாய்ப்பை வியப்பாய்
மாற்றலாம் விவேகமிருந்தால்

கண்ணுக்குள் நுழைந்து
கனவை தூண்டுகிறாய்