பேச்சால் வெல்ல முடியாது
செயலால் தான்
உலகம் நமக்குப் பதிலளிக்கும்

நம் வாழ்க்கையில்
நடக்கும் பல விஷயங்கள்
நம் கட்டுப்பாட்டில்
இல்லை என்பதை
புரிந்து கொண்டால் போதும்
அமைதி கிடைக்கும்

அன்று நமக்காக நேரம்
ஒதுக்கி அவர்கள் இன்று
நம்மையே ஒதுக்குகிறார்கள்

உழைப்பு என்பது
விதைத்த விதை
பொறுமை அதற்கு மழை

கடந்து போன நிமிடங்கள்
ஏனோ கலைக்க முடியாத
நினைவுகளை மட்டும்
விட்டு செல்கின்றன

எதுவாயினும் கடக்க
பழகு எல்லாம் சிறிது
காலம் தான்

கடினமான பாதைகளே
மிக அழகான இடங்களுக்கு
கொண்டு செல்கின்றன

உழைப்பின் வேர்கள்
கசப்பாக இருந்தாலும்
வெற்றியின் பழம்
இனிக்க தான் செய்யும்

வாழ்க்கையில் வெற்றி இல்லாமல்
இருந்தாலும் பரவாயில்லை
உண்மையான நட்பு இருந்தால்
வாழ்க்கையே வெற்றி

உயிராகவும்
உணர்வாகவும்
இருந்தவர்கள்
வெறும் நினைவாக
மாறுவது
மிகப்பெரிய வலி