தோல்வி என்பது முடிவு அல்ல
அதை முறியடிக்காமலிருப்பதே
நிஜமான தோல்வி

அன்பின் இலக்கணம்
வாழ்வின் அடிப்படையில்
உறுதியான நட்பு
அழிக்க முடியாத கோட்டை போல

தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
இவஅடங்கமாட்டானு
நம்ம கிட்ட தோற்றுவிடும்

முயற்சியால் புதியவற்றை
தெரிந்து கொள்வதும்
திறமைகளை
வளர்த்துக் கொள்வதுமே
வாழ்வில் முன்னேற்றம்
அடைவதற்கான
எளிமையான வழி

அலை அலையாய்
சுழல்கிறது
நினைவலைகள்
உதிர்ந்(த்)துவிட்ட
இலையின் ஒருதுளி
கண்ணீர்துளியில்

சவால்கள் வந்தால்
சரிவை நினைக்காதே
வளர்ச்சியை கற்பனை செய்

வாழ்வும் வரம்
ஆளும் உன்னன்பில் அன்பே

கத்துக்க ஆயிரம்
விஷயம் இருக்கலாம்
ஆனால்
அத கத்துக்குற
நிலமையில
நாம இருக்கனும்
அப்படி இல்லைனா
வாழ்க்கை
நமக்கு நல்லா
கத்துக்குடுத்துட்டு போயிரும்

சில தவறுகளுக்கு
கோபப்படுவதை விட
கண்டுகொள்ளாமல்
கடந்து விடுவது நல்லது

உன்னை நம்பாதவர்களுக்கு
பதில் சொல்ல நினைப்பதை விட
உன் வெற்றியால்
அவர்களை மௌனமாக்கு