நீர் விழுவதை ரசிக்கும்
ஒருவனுடன் பழகலாம்
நீ விழுவதை ரசிக்கும்
ஒருவனுடன் பழகாதே

வேடிக்கை பார்ப்பவனுக்கு
இழப்பின் மதிப்பு புரியாது

கனவில் மட்டுமே
என் வாழ்க்கை
நான் விரும்புவதை
போல் அமைகிறது
நிஜத்தில் அல்ல

பேசாமல் இருக்க
கற்றுக்கொள்வது
வாழ்க்கையின்
மிகப்பெரிய கலையாகும்

மனதால் இணைந்து
இருப்பது மட்டும்தான்
சுத்தமான தூயகாதல்

நாளை எதையும் தரக்கூடும்
இன்று முயற்சிக்காமல் இருக்காதே

கண் விழித்ததும்
கலைந்து போக கூடியது நட்பல்ல
கண் மூடும் வரை
தொடர்ந்துவருவதுதான்
உண்மையான நட்பு

பிடித்தவைகளுக்கு
நினைவுகள் மட்டுமே
போதுமானதாய் இருக்கிறது

நிரந்தரமானது
என்பது எல்லாம்
தற்காலிகமானதே
ஒரு நாள்
அவை அனைத்துமே
மறைந்து விடும்

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய்
தெளிவாகவே இருப்போம்