முடிவிற்கு முன்
நீ முயற்சி செய்தால்
முடியாதது எதுவும் இல்லை
கலப்படம் இல்லாத
புன்னகை
குழந்தைகளிடம் மட்டுமே
எங்கு எதை தொலைத்ததோ
தெரியவில்லை இந்த
வானம் இப்படி கண்ணீர்
வடிக்கிறதே மழையாக
வார்த்தைகள்
பல இருந்தும்
மௌனம் ஆகிறேன்
என்னை பேச விடாமல்
உன் அன்பானது
கட்டி போடுவதில்
வல்லமை பெற்றதால்
உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்
ஒரு போலியான
உறவை நேசித்து
நாமே நம் மனதை
காயபடுத்தி கொள்வதை
விட தனிமை மேலானது
மழை மட்டும் தான் இல்லை
சில நினைவுகளும் தூறல் விடும்
சிரமம் வந்தால் நிற்காதே
அது வாழ்வின்
புதிய கதவை திறக்கிறது
பலர் விரும்பியும்
கிடைக்காத வரம்
நிம்மதியான உறக்கம்
நேற்று விழுந்த இடத்தில்
இன்று நின்றால்
அதுவே முன்னேற்றம்
📖 பக்கம் 159 / 606
📋 Copied