இன்பத்தில் இணையாக
துன்பத்தில் துணையாக
எனக்கு ஒப்பற்ற உறவாய்
இருப்பது நண்பர்கள் மட்டுமே

பிடித்ததை எடுத்து
பிடிக்காததை விடுத்து
மகிழ்ச்சியாக இரு

எந்த பாதையும் தவறில்லை
அது உன்னால்
பயணிக்கப்படும்வரை

அன்பு
எனும் விதை
தரமாக இருந்தால்
நட்பு
எனும் கனிகள்
சுவையாக கிடைக்கும்

கோபப்படும் இடங்களில்
துரோகம் இருப்பதில்லை
துரோகம் செய்யும் இடத்தில்
கோபம் இருப்பதில்லை

வானம் உயரமாக இருக்கலாம்
ஆனால் அதை
தொட நினைக்கும் மனம்
அதைவிட உயரமானது

பிறர் வாழ்க்கையை
ஒப்பிடும் முன்
உன் பாதையில்
எத்தனை தடைகளை
கடந்தாய் என்பதை நினை

வாழ்க்கை மலர் என்றால்
அதற்கு மணமாக இருப்பது
நம்முடைய நற்பண்புகள்

முடியாது என்றால்
முயற்சிக்கு எல்லை இல்லை
என்பதற்கான சான்று தான் நீ

வாழ்ந்து கொண்டிருப்பதென்னவோ
நாம்தான் ஆனால்
நமக்கான வாழ்க்கையை
ஒரு நாளாவது வாழ்ந்தோமா
என வாழ்க்கையை
திரும்பிப் பார்த்தால்
பெரும்பாலும் மிகப்பெரிய
வெறுமையே மிஞ்சும்