புரிந்தும் புரியாத மாதிரி
இருப்பவர்களிடம்
நீங்கள் தெரிந்தும் தெரியாத
மாதிரி இருக்க பழகிக்
கொள்ள வேண்டும்

வாழ்க்கை என்றால்
வரும் ஆயிரம் துயர்
அதை எதையும்
பொருட்படுத்தாமல்
நீ தொடர்ந்து உயர்

நம்பிக்கையில் கிடைக்கும்
மன நிறைவு
வேறெதிலும் கிடைப்பதில்லை

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது
இருளில் தான்

இறப்பதற்கு
ஒரு நொடி துணிச்சல் போதும்
ஆனால் வாழ்வதற்கு
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் வேண்டும்

முடியாது என்று
நினைக்கும் போது கூட
இன்னும் ஒரு முறை முயற்சி செய்

காதலின் பிரிவை விட
கொடுமையானது பல
வருடங்கள் பழகிய
நட்பின் பிரிவு

சில முடிவுகள் வலிக்கும்
ஆனால் அவை
மன அமைதியைத் தரும்

சுமைகளைச் சிரிப்பாக
மாற்றுவதில் தான்
வாழ்க்கையின்
நிபுணத்துவம் இருக்கிறது

முதல் முறை
யோசித்தால் தான்
அது யோசனை
பலமுறை அதையே
யோசித்தால்
அது குழப்பத்தில்
இருப்பதன் வெளிப்பாடே