மற்றவர் நம்மை வெறுப்பது கூட தெரியாமல் ஏன் என்கூட பேசல என்னாச்சு என்று கேட்குற மனம் தான் அதிகம்
அழுகையும் சரி சோகமும் சரி உன்னை ஏமாற்றியவர்களுக்காக சிந்தாதே
எளிதில் மேலே போக எஸ்கலேட்டர் உதவினாலும் முதல் படியிலும் கடைசி படியிலும் கவனமும் நிதானமும் தேவை வாழ்க்கையில் மேலே போகவிரும்புபவர்களுக்கும் இதே கவனமும் நிதானமும் தேவை
பலரை சில காலமும் சிலரை பல காலமும் ஏமாற்றலாம்
ஒருவர் நம்மோடு பேசும் நேரம் குறைகிறது என்றால் அவர் நம்மீது வைத்துள்ள அன்பு குறைகிறது என்றே அர்த்தம்
இதயம் இருப்பது என்னமோ எனக்குள் தான் ஆனால் அது துடிப்பது என்னமோ உனக்காக மட்டும் தான்
கடந்த காலத்தை விட அதிகம் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் நிகழ்காலத்தை
உங்களின் உணர்ச்சிகளைவிட வலுவானதாக உங்களின் மனதைத் திடப்படுத்துங்கள் இல்லையெனில் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் உங்களை இழந்துகொண்டிருப்பீர்கள்
நாம் அதிகமாக நேசித்த ஒருவரே நாம் அதிகமாக வெறுக்கும் ஒருவராக மாற்றப்படுகின்றனர் காலத்தின் சில விளையாட்டினால்
நேற்றைய தோல்விகளுக்கான காரணங்களை நீங்கள் கண்டறியா விட்டால் நாளைய வெற்றியை நோக்கி உங்களால் ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியாது