உண்மையான நண்பர்கள்
உங்கள் சோகங்களை குறைத்து
உங்கள் சந்தோஷங்களை பெருக்குவார்கள்

இறந்தகாலத்தை நினைத்து
வருந்துவதை விட
எதிர்காலத்தை நினைத்து
பயப்படுவதை விட
நிகழ்காலத்தை நினைத்து
சந்தோஷமாக வாழ்ந்து விட்டு
போய்விடு மனிதா

நேரம் சோர்வடையும்போது
நம்பிக்கை தான் நம்மை நகர்த்தும்

எப்போதும் உன்
அடையாளத்தை
யாருக்காகவும்
விட்டுக் கொடுக்காதே

பயிற்சியும் முயற்சியும்
சேர்ந்தால் தான் வெற்றி
பயிற்சி செய்து
முயற்சி செய்
வெற்றி உனதே

வாழ்வை திட்டமிட முடியாது
ஆனால் எதிர்நோக்கி நடக்கலாம்

கிடைக்காத ஒன்றுக்காக
நமக்கு கிடைத்த
பொக்கிஷங்களை
ஒருபோதும் தொலைத்து
விடாதீர்கள்

வெற்றி ஒருநாள் வரும்
ஆனால் அது
உன்னை காண வருமா
நீ அதைக் காண்பதற்காக
வருவாயா என்பதை
உன் செயல்தான் தீர்மானிக்கும்

வெற்றிக்கான சாவி
உன் கையில் தான்
பிறரை குறை சொல்லாதே

சுற்றம் இல்லாமல் வாழலாம்
ஆனால் சந்தோஷமில்லாமல்
முடியாது