அடுத்த நொடி
மறைத்து வைத்திருக்கும்
ஆச்சரியங்களே
இந்த வாழ்க்கை
எந்த நிமிடமும்
முடிந்து போகும்
அது வரை
அன்பை விதைத்து
அறுவடை செய்

நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை

வழியே இல்லையென
நினைக்கும் தருணங்களில் தான்
புதிய பாதைகள் உருவாகின்றன

உற்றுப் பார்த்தால்
ஒன்றுமே இல்லை
ஆனாலும்
ஏனோ விட்டு விலக
மனம் வருவதே இல்லை
இயற்கையின் அழகை
சொன்னேனாக்கும்

பயந்து நின்றவர்கள்
வரலாறு
படைக்க மாட்டார்கள்

நட்பு விட்டுப்போகலாம்
நினைவுகள் மட்டும் விலக மறுக்கும்

ஒரு மனிதனுக்கு
பலமும் பலவினமும்
அவருடைய மனச
பொருத்து தான் இருக்கு

தொட்டுச்செல்லும் நினைவுகளை
விடாமல் துரத்துகின்றது மனம்

எப்பவும் குறை மட்டும்
சொல்றவங்களுக்கு
வாழ தெரியாது வாழ
தெரிஞ்சவங்களுக்கு
குறையே தெரியாது

கற்றுத்தெளிவது கல்வி
அறிந்து தெளிவது அறிவு