கோபம் எனும்
இருட்டில் விழுந்து
விடாதே
பிறகு பாசம்
எனும் பகல்
கண்ணுக்கு
தெரியாது

எல்லோருக்கும் நம்மை
நம்ப செய்ய முடியாது
ஆனால் நாமும் நம்மை
நம்ப மறக்கக்கூடாது

மழை வரும் வரைக்கும்
வானம் பொறுத்ததுபோல்
வெற்றிக்கு பொறுமை தேவை

வீண் பிடிவாதங்களை
விரட்டினால்
இந்த வாழ்க்கை
மிக அழகானதே

நேரம் ஓடுகிறது
அதைத் துரத்துபவன் தோற்றுவான்
அதை அணைத்துப் பயணிப்பவன் வெல்வான்

ரசிப்பதை எல்லாம்
அடைய நினைக்கிறோம்
அடைந்ததை எல்லாம்
ரசிக்க மறக்கிறோம்

தோல்வி தள்ளும் தருணமே
வெற்றி வருகையின் தொடக்கம்

சுழற்சி நிலைக்காது
என்பதால்தான் வாழ்க்கை
சுவாரஸ்யமடைகிறது

உண்மையான
அன்பு என்பது
வார்த்தைகளால்
விவரிக்க இயலாதது
அது உணர்ச்சிகளாலும்
எண்ணங்களாலும்
செயலாலும் உணர்த்தப்படுவது

நடப்பவை அனைத்தும்
நல்லதாக
இல்லை என்றாலும்
நல்லது மட்டுமே
நடக்க வேண்டும்
என்று நம்புவோம்