பார்க்கின்ற அனைத்தையும்
மனதிற்கு கொண்டு
செல்லவும் கூடாது
மனதில் நினைப்பது
அனைத்தையும்
பேசிவிடவும் கூடாது
இரண்டும் பிரச்சனைதான்

வெற்றியாளரின் பாதையில்
சென்று விரைவில்
வெற்றி அடைவதைக் காட்டிலும்
உனக்கென
ஒரு பாதையை உருவாக்கு
அதில் நம்பிக்கையுடன் பயணப்படு
நிச்சயமாக வெற்றி உன் வசமே
உன் வழியில்
உன்னை பின்பற்றி வர
பலர் காத்துக் கிடப்பார்கள்

அழகு வாழ்க்கையில் கிடைக்காது
அதை காணும் மனசு தான் அழகு

சோகமான நாட்கள் கூட
நம்மை உண்மையாய்
வாழ கற்றுக்கொடுக்கின்றன

அன்பானவர்களுக்காக
இறங்கி போவதும் தவறில்லை
நம் அன்பு புரியாதவர்களிடம்
விலகி போவதும் தவறில்லை

சுமக்கத் தெரிந்து கொண்டால்
சுமைகள் சுலபம் தான்
சாதிக்கப் பழகி விட்டால்
தடைக்கல்லும் படிக்கல் தான்

பரிட்சையில் எழுதும் பதில்களை விட
வாழ்க்கை கற்பிக்கும்
பாடங்கள் தான்
உன் உண்மையான ஞானம்

குழந்தைகள் செய்யும்
குறும்புகளும் சுகமே
தாயின் பார்வையில்

வாழ்க்கை சீராக அல்ல
சுவாரஸ்யமாக இருக்கட்டும்

ஒரு நாள் அமைதி
இல்லாமல் இருந்தாலும்
அனுபவம் மிச்சமா இருக்கும்