அன்பு மட்டும் தான்
உலகில் நிரந்தரமானது
அதை உண்மையாக்குவதும்
பொய்யாக்குவதும்
நாம் நேசிப்பவரிடம்
மட்டுமே உள்ளது
எல்லா பயணமும்
நாம் நினைத்த
இடத்தில் முடிவதில்லை
வழி தவறிப்போகும்
சில பயணங்கள் தான்
வாழ்கையில் பல பாடங்களை
நமக்கு கற்றுத் தருகின்றது
தந்திரம் பழகு யாருக்கும்
குழி பறிக்க அல்ல
யார் பறித்த குழியிலும்
விழாமல் இருக்க
இன்பமும் துன்பமும்
ஆற்று வெள்ளம்
போன்றது நிலையாக
நிற்காது ஓடி விடும்
நாளை வெற்றி பெற வேண்டும்
என்ற எண்ணம்
இன்று உழைக்கும் வழியை
அமைக்கும்
வியர்வை இல்லாமல்
உண்டான வெற்றிக்கு
நீண்ட நாள் வாசனை இருக்காது
வாழ்க்கை ஓர்
இடைவிடாத பயணம்
ஓய்வெடுக்க முயற்சிக்காதே
ரசிக்க கற்றுக்கொள்
மனதளவில் எவராலும்
உங்களுக்கு
வலி ஏற்படுத்த முடியாது
நீங்கள்தான்
உங்களைச் சுற்றி நிகழும
ஏதோவொன்றிற்கு எதிர்செயலாக
வலியை உருவாக்குகிறீர்கள்
தோல்வியில் மறைந்திருக்கும்
திறமையை தேடி எழுந்தால்
வெற்றி உன்னையே தேடி வரும்
முயற்சி செய்து
தோல்வியடைந்தவனை
வாழ்க்கை மன்னிக்கும்
முயற்சிக்காமலே வாழ்ந்தவனை
நேரம் மன்னிக்காது
📖 பக்கம் 147 / 606
📋 Copied