வலிகள் தாங்கும் மனம் தான்
புன்னகையாய் பொலிவதற்குத் துணை

வாழ்க்கை புன்னகையால்
ஆரம்பிக்கலாம்
ஆனால் கண்ணீரால்
உணர்வுகள் உருக்கப்படுகின்றன

தோல்வி ஓரளவு பயமளிக்கலாம்
ஆனால் முயற்சியை கைவிடுவது
வாழ்நாள் முழுவதும் வருத்தமளிக்கும்

வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு

கடவுள் எழுதி முடித்துவிட்ட
நாடகத்துக்கு தினமும்
போடுகின்றோம் வேஷம்

சிரமம் தாங்கிய மனதில்தான்
உண்மையான வெற்றி பிறக்கிறது

தொடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்க
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கையை தேடி

சில நேரங்களில்
தனிமை கடினம்
சில நேரங்களில்
தனிமை தான்
இனிமையான தருணம்

பேசாத பொழுதும்
பேசிக் கொண்டே
இருக்கிறது
பேசிய நினைவுகள்

வெறுக்கும் கண்கள்
நம்மை வேடிக்கை பார்க்கட்டும்
புன்னகையுடன் கடந்து செல்வோம்