பொழுதுகள் விரைவாக ஓடும்
ஆனால் உணர்வுகள் மட்டும்
காலத்தை முந்தி செல்கின்றன
பொழுதுகள் விரைவாக ஓடும்
ஆனால் உணர்வுகள் மட்டும்
காலத்தை முந்தி செல்கின்றன
எதிரியே ஆனாலும்
துரோகத்தால்
தோற்க்கடிக்காதே
எங்கேயும்
நம்மை விட்டுக் கொடுக்காத
உறவை தான் நாம் தேடுகிறோம்
ஆனால் அமைவதென்னவோ
நம்மை உதறிவிட்டு
செல்லும் உறவுகளே
தோல்வி கூட
ஒரு வெற்றிக்கான
கதையாசிரியனாக இருக்கிறது
ஒவ்வொரு சுவாசமும்
ஒரு புதிய ஆரம்பம்
முகவரி இன்றி
முடிந்து போன
உறவுகளிடம் தான்
முடங்கி விடுகிறது
நம் நினைவுகள்
நெருங்கிப் பழகாத வரை
அனைத்து உறவுகளும்
அன்பான உறவுகள் தான்
விலகிட நினைக்கும்
அந்த கனம் தான்
நாம் இருப்பது
நினைவிற்க்கு வரும்
சிலருக்கு
நினைப்பது போல் வாழ்க்கை
எல்லோருக்கும் அமைந்து
விடுவதில்லை அழகாய்
அமைந்த வாழ்க்கையைக்
கூட சிலருக்கு வாழத்
தெரிவதும் இல்லை
உரிமை உண்டு என
நினைத்தாலும் நமக்கு
மதிப்பு இல்லையென
தெரியும் போது
ஒதுங்கிவிடுவதே மேல்