உருவமில்லாத ஒன்று
உலகையே ஆளுகிறது
என்றால்
அது ஒருவர் மீது வைக்கும்
உண்மையான
அன்பாக தான்
இருக்க முடியும்
நிபந்தனைகளுக்குட்பட்டு
இருக்கும் நட்பு
நிரந்தரமானதில்லை
கடந்த காலம் நமக்கு
பாடமாக இருக்கவேண்டுமே
ஒழிய பாரமாக இருக்க
நாம் அனுமதிக்கக்கூடாது
கூட்டத்தோடு ஓடாதே
உன் பாதையை நீயே
அமைத்துக் கொள்
அது மெதுவாக இருந்தாலும்
உறுதியாக இருக்கும்
வெற்றிடத்தின் வலி
உணர்த்தவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை
நற்குணங்களை
தகுதியாக்கிக் கொண்டு
நான் இப்படி தான்
என்று நிலைத்து நில்லுங்கள்
புரிபவர்கள் புரிந்து வருவார்கள்
புரியாதவர்கள் விலகி செல்வார்கள்
எதுவாகினும் நட்டம் நமக்கில்லை
சிரித்த நாட்களை
நினைத்து அழுகிறேன்
அழுத நாட்களை
நினைத்து சிரிக்கிறேன்
யாரோ ஒருவரின் கோபம்
உன் நிம்மதியைக் கெடுக்க
அனுமதிப்பதே முதல் தோல்வி
உன் சாவி
உன் கையில் இருக்கட்டும்
வாழ்க்கையில் எதிரிகள் தேவை
ஏனெனில் அவர்களால் தான்
நாம் நிமிர்ந்து நடக்க
கற்றுக்கொள்கிறோம்
வேகம் குறைந்தாலும்
திசை சரியாக இருக்கட்டும்
📖 பக்கம் 145 / 622
📋 Copied