அதிக உரிமை
எடுக்காதே
கொடுக்காதே
ஒருநாள்
வெறுப்பாய் வெறுக்கபடுவாய்

வட்டம் போட்டு
வாழ்வதில் தவறு இல்லை
ஆனால்
அந்த வட்டம் மட்டுமே
வாழ்க்கை என்று
நினைப்பது தான் தவறு

அன்பின் கரம் பற்றி
அவஸ்தைகளோடு
நகர்கிறது வாழ்க்கை

வெற்றிடம் வெகு சுலபமாக
நிரப்பப் படுகிறது
உறவுகளில் வெற்றிடத்தை
உண்டாக்காதீர்கள்
உங்கள் இடத்தை பறிகொடுத்து
விடாதீர்கள்

நீயாக வாய்ப்புகளை தேடி
போகாவிட்டாலும்
உன்னை தேடி வரும்
வாய்ப்புகளை தவற விடாதே
எது உன்னை தேடி
வருகிறதோ
அது மட்டுமே உனக்கானது

இருக்கும் போது மரியாதை
வேண்டும் என்றால் பணம்
வேண்டும் இறந்த பிறகு
வேண்டும் என்றால்
நல்ல குணம் வேண்டும்

பிறரின் பார்வை
உங்கள் திறமையை
கண்டு கொள்ளவில்லை
என்று எண்ணாதீர்கள்
நீங்கள் போகும் பாதையில்
செய்யும் முயற்சிகளை
தொடர்ந்து கொண்டே இருங்கள்
ஒரு நாள் உங்கள் தேவை
அறிந்து அவர்கள் பார்வை
உங்கள் வசம் வரும்

நமது எண்ணங்கள்
மிகவும் வலிமையானது
அவற்றை
பூக்களைப் போல தூவினால்
அது நமக்கு
மாலையாகக் கிடைக்கும்
கற்களைப் போல எரிந்தால்
அது நமக்கு
காயங்களாகக் கிடைக்கும்

துரோகத்தின் முதல் விதை
அதிகபட்ச நம்பிக்கையால்
தான் தூவப்படுகிறது

நடக்கவேண்டியது நடக்கும்
தேவையற்ற பதற்றம் எதற்கு
மகிழ்ந்திருங்கள்