ஒருவரின்
இன்பத்திற்கும்
துன்பத்திற்கும்
காரணம் அன்புதான்

அன்பை பகிர்ந்து கொள்ளவும்
புரிந்துக்கொள்ளவும்
அறிவு தேவையில்லை
அழகிய மனம் போதும்

பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்
இனி பிறக்கப்போவதில்லை என்று
நினைத்து வாழுங்கள்

உலகம் நம்மை
மதிக்க விரும்பினால்
முதலில் நாம் நம்மை நம்பவேண்டும்

முடிவுகளை முன்னால் வைத்து
பயணிக்காதே முயற்சியை முன்னால் வை
முடிவுகள் பின்னாலேயே வரும்

மெதுவாக நடக்கும்
தோல்வியை வேகமாக
ஓடிப் பிடிக்கிறது
சோம்பல், உற்சாகமே
வெற்றியின் வாசல்

வாழ்க்கையில்
நெருக்கடி வருகிற போது
மனிதர்கள் மறைந்து போகிறார்கள்

தொடங்க நினைத்தது போதும்
பாதி வெற்றி உனது

எளிமையைப் புரிந்தவர்களே
வாழ்க்கையை உணர்ந்தவர்கள்

உண்மையை
உரக்க சொன்னாலும்
நம்பாத இந்த உலகம் தான்
பொய்யை முனுமுனுத்தாலும்
நம்பி விடுவது தான் எதார்த்தம்