எல்லோருக்குள்ளும்
இருக்கிறது
ஏதோவொரு தேடலும்
முடியா காத்திருப்பும்

புரிதல் என்பது
வார்த்தைகளில் அல்ல
உணர்வுகளில் ஒன்றி
இருக்க வேண்டும்

எல்லா எதிர்பார்ப்புகளிலும்
ஏமாற்றம் என்ற பரிசும்
எல்லா ஏமாற்றத்திற்கு
பிறகும் பக்குவம்
என்ற பரிசும்
கிடைப்பதற்கு
பெயர் தான் வாழ்க்கை

வெளிப்படையாக இருந்து
விடாதே பலர் உன்னை
வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்

எப்பவுமே
நம்ம சந்தோஷமா
இருக்க முடியாது
ஆனா நம்ம கூட
இருக்கவங்களையும்
நம்மள நம்பி இருக்கவங்களையும்
முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா
வச்சிருக்க முடியும்
அதுவே நமக்கு அளவான
சந்தோஷத்தை தரும்

வட்டம் போட்டு
வாழ்வதில் தவறு இல்லை
ஆனால்
அந்த வட்டம் மட்டுமே
வாழ்க்கை என்று
நினைப்பது தான் தவறு

முயற்சியில்லாமல் ஆசைப்படாதே
கனவுகளுக்கு விலை உண்டு

கனவின் மிச்சத்தை
உயிர்ப்பிக்க முடியாமல்
உணர்வின்றியே
உதித்துக்கொண்டுதானிருக்கிறது
ஒவ்வொரு விடியலும்

தேடுவதற்கு
யாராது இருந்தால் தான்
தொலைந்து போவதில் கூட
சுவாரசியம் உண்டு

எந்நிலையிலும்
நீ யாருக்கும்
தாழ்ந்தவரில்லை
எப்போதும் உன்னை
நீ உயர்ந்தயிடத்திலேயே
வைத்திரு...!