உணர்விற்கு
மதிப்பளிக்காத இடத்தில்
அழுதாலென்ன
சிரித்தாலென்ன

பல நேரம் பயணமே
இலக்கை விட அழகானது
அதை புரிந்தவர்கள் தான் வாழ்கிறார்கள்

நல்லவர்களாக நடிப்பவர்கள்
மத்தியில் சுயத்தோடு
இருப்பவர்கள்
என்றும் துரோகிகளே

எல்லோரும்
பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு

ஆசை வளர்ப்பதும்
ஆணவம் பெருகுவதும்
மனிதனது அழிவுக்கே அறிகுறி

சில உறவுகள் நம்மிடம்
ஆரம்பத்தில் காட்டும்
அன்பை கடைசி வரை
காட்டுவது இல்லை

இந்த நொடி
மகிழ்ச்சியாக இருப்போம்
இந்த நொடி
தான் வாழ்க்கை
மகிழ்ச்சி என்ற சாவியை
தேடி அலைய வேண்டாம்
அது நம்மிடம் தான் உள்ளது

சில நேரங்களில்
பயணமே முக்கியம்
இலக்கை தவிர்த்தாலும்
வாழ்க்கையில் வண்ணம் காணலாம்

பொய்யான அன்பு
பொழுதுபோக்கான பேச்சு
தேவைப்படும் போது தேடல்
இது தான் இங்கே
பலரது வாழ்க்கை

வாழ்க்கையில்
நம்மை விட சிறப்பா
பலர் வாழலாம் ஆனால்
நம்ம வாழ்க்கையை
நம்மை விட சிறப்பா
யாராலையும் வாழ்ந்து
விட முடியாது