✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தனிமை என்பது
ஒரு வகை போதை
ஒரு முறை அனுபவித்து விட்டால்
அதிலிருந்து மீள முடியாது
content_copy
சோகம் சில நேரம்
மனதை நொறுக்கலாம்
ஆனால் அது ஆன்மாவை
வலுப்படுத்தும்
content_copy
எதிர்பார்ப்புகள் பல
என் மனதில் எழுந்தாலும்
ஏமாற்றமே என்றும்
எனக்கு நிலையாகிறது
content_copy
எப்போது
நம் பேச்சுக்கு
ஒருவர் இடத்தில்
மதிப்பு இல்லை
என்று தெரிகிறதோ
அந்த இடத்தை
விட்டு விலகி விடுங்கள்
அவர்கள் நம்மை தேடும்
அளவிற்கு
content_copy
ஆயிரம் தடவை
சரியாக செய்திருந்தாலும்
ஒரு தவறை வைத்தே
எடைபோடுவது மனித இயல்பு
content_copy
என்னதான் நமக்கு
நீச்சல் தெரிந்திருந்தாலும்
சாக்கடையில்
விழுந்து விட்டால்
எழுந்து வரவேண்டுமே
தவிர அங்கும்
நீச்சல் அடிக்கக் கூடாது
content_copy
முயற்சி செய்யும்
ஒவ்வொரு அடியும்
ஒரு நாள் பெருமையாக மாறும்
content_copy
சிரித்துக் கொண்டே
கடந்துவிடு
உன் கஷ்டங்களை
மட்டுமல்ல
உன்னை கலங்க
வைத்தவர்களையும்
content_copy
ஜெயித்தவனுக்கு தான்
அடுத்து ஜெயிப்போமா
என்கிற பயம் இருக்கும்
ஆனால் தோற்றவனுக்கு
அடுத்து கண்டிப்பாக
ஜெயிப்போம் என்கிற
நம்பிக்கை இருக்கும்
content_copy
நமக்கு பிடிப்பவர்களுக்கு
நம்மை பிடிப்பதில்லை
நம்மை பிடிப்பவர்களை
நாம் விரும்புவதில்லை
📖 பக்கம் 141 / 606
arrow_back
arrow_forward
📋 Copied