ஓடிக்கொண்டே இரு
எல்லைக்கோட்டை அடையாவிட்டாலும்
உன் கால்கள் உறுதிப்படும்

மண்ணில் விழும் விதைகள்
அழுவதில்லை
வேராக வலுப்படுவதே
வாழ்க்கை

சிரமங்களைச் சந்திக்கின்ற நேரத்தில்தான்
நம்பிக்கையின் வலிமை தெரியும்

நான் சலித்து பின்
செல்பவன் அல்ல
எதுவாக இருந்தாலும்
சாதித்து முன் செல்பவன்

ஒரு நாள் அமைதி
இல்லாமல் இருந்தாலும்
அனுபவம் மிச்சமா இருக்கும்

தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை
எது நடக்குமோ அது நடந்தே ஆகும்

இருந்தால் உறவு
பிரிந்தால் நினைவு
அவ்வளவு தான்
வாழ்க்கை

வாழ்க்கையின் அர்த்தம்
கடந்து வந்த பாதைகளில் இல்லை
கடக்க உள்ள பாதையில் இருக்கிறது

முயற்சி என்பது
தோல்விக்கு எதிரான
ஒரு அமைதியான போர்

எதையும்
யாரிடமும் எதிர்பார்க்காமல்
வெற்றி
தோல்வி
என்று மனம் சஞ்சலப்படாமல்
நடப்பது அனைத்தும்
நன்மைக்கே
என்று மகிழ்ச்சியுடன்
வாழ்வோம்
வாழ்க்கை வாழ்வதற்கே