வெற்றி என்பது
மற்றவர்களால் வழங்கப்படும்
பாராட்டு அல்ல
நம் முயற்சி
நமக்கே தரும் திருப்தி

உனக்கான கதவு திறக்கவில்லை
எனில் உனக்கென ஒரு
வழியை உருவாக்கு

வெற்றி என்பது முடிவல்ல
முயற்சியின் தொடர்ச்சி மட்டுமே
வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்

ஒவ்வொரு நாளும்
விடியும் போது
ஒரு எதிர்பார்ப்பு
ஒவ்வொரு நாளும்
முடியும் போது
ஒரு அனுபவம்

காலம் சிலரின் முகத்திரைகளை கிழிக்கும்

உலகில்
விலைமதிப்பில்லாதது
நம்மிடம் இருப்பவை
அல்ல
நம்மிடம் இருப்பவர்கள்

வீழ்வது தவறில்லை
வீழ்ந்தே கிடப்பது தான் தவறு

வாழ்க்கை
என்ற படத்தில்
சிறப்பாக நடிப்பவர்கள்
நல்லவர்களாகவும்
நடிக்கத் தெரியாதவர்கள்
கெட்டவர்களாகவும்
ஆக்கப்படுகின்றனர்

தனிமை வரும்போது தான்
உண்மையான உறவுகளின்
மதிப்பை உணர முடியும்

ஓய்வின்றி ஓடுபவன் மட்டுமே
வெற்றியின் கதவை திறக்க முடியும்