இந்த உலகம்
ஆசையை தூண்டிவிட
படைக்கப்பட்டது
அதனை நாம் ரசிக்கலாம்
ஆனால் அதிலே
மூழ்கிவிட கூடாது

அன்பைக்கொண்டு
அன்பைப் பெறுங்கள்
மாறாக
பொறாமையில்
ஒருவர் மீது ஒருவர்
கொண்டுள்ள
அன்பைக் கொன்று
அவ்விடத்தில் தங்கள் அன்பை
நிலைநிறுத்த எண்ணுவது
குற்றமே

முடிவில் உயர்வது கனவல்ல
அதற்காக தினமும்
உழைத்த நிமிடங்கள் தான்

வாழ்க்கையில் நமக்கு
கிடைக்கும்
சிறந்த பரிசு
பிறர் நம்மீது வைக்கும்
நம்பிக்கை தான்

ஒரு புத்தகத்தின்
பக்கம் மாறுவது போல்
வாழ்க்கையில்
புதிய அத்தியாயத்தை
தொடங்குங்கள்
புதிய காலம்
உங்களுக்காக காத்திருக்கிறது

பொறாமை வளர்த்தால்
வளர்ச்சி நின்றுவிடும்

சரிவு முடிவாக இருக்காது
அது உச்சத்திற்கான
தொடக்கம் மட்டுமே

ஒவ்வொரு நாள்
புதிய வாய்ப்புகளை தந்தால்
அதைப் பயன்படுத்த வாழுங்கள்

வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள...
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்

ஒருவரும் நம்மோடு
நிலைக்கமாட்டார்கள்
வாழ்க்கை முடியும் வரை
நம்மோடு இருக்கும்
ஒரே நபர் நாம்தான்