இடையூறுகள் எல்லாம்
நமக்காக எழும் சோதனைகள் அல்ல
வளர்ச்சிக்கான எச்சரிக்கைகள்

சிரமங்களை
சந்திக்கிற தோரணமே
வெற்றியின் முதல் அடிக்கல்

சில நேரங்களில்
அமைதியே
அழுகையின் வடிவம்

நிறைவடையாத முயற்சியும்
ஒரு நாள்
வெற்றியின் விதையாகும்

உன் திறமை
காணப்படும் வரை
உனது முயற்சியை நிறுத்தாதே

வாழ்வின் உண்மை அழகு
எதிர்பாராத திருப்பங்களில் தான்
பதுங்கியிருக்கும்

நல்ல இயற்கையை
விட்டு செல்வோம்
அடுத்த தலை
முறைக்கு பரிசாக

ஒருவனின் தெளிவான
குறிக்கோளே வெற்றியின்
முதல் ஆரம்பம்

பிரிந்து போவாய் என
தெரியும்
மறந்து போவாய் என்
தெரியாது

சின்ன சின்ன அனுபவங்களே
வாழ்க்கையை
பெரிய பாடமாக்குகின்றன