பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை

அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி

துணிச்சல் என்பது
ஒருவரை பேச விடாமல்
செய்வது அல்ல
அனைவரையும்
நம்மை பற்றி
பேச செய்வது

பிரியமுள்ள உறவுடன்
பிரிய மனமில்லாமல்
பிரியமுடன் வாழும்
வாழ்க்கையே
ஒரு தனி
அழகு தான்

அன்புக்காக
ஏங்கி தேடாதீர்கள்
அன்புக்காக ஏங்குபவரை
தேடுங்கள்

இன்று நீ விடாமல் செய்த வேலை
நாளைய வெற்றிக்கான விதை

வாழ்க்கை என்ற சொல்
ஒரு பெரிய
புத்தகத்தின் தலைப்பு
அதன் முக்கியமான அர்த்தம்
சிறு சந்தோஷ
நிமிடங்களில் தான் உள்ளது

வாழ்க்கையில்
வலிகளை அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள்
சிறந்ததாகவே இருக்கும்

சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள் மனதில்
கவலை இருப்பினும்
அகம் போல முகமும்
அழகு பெறும்

உறவுகள் தூக்கி
எறிந்தால் வருந்தாதே
அவர்கள் முன்
வாழ்ந்து காட்டு
மகிழ்ச்சியாக நிம்மதியாக