நான் வெற்றி
அடைவேன் உடனடியாக
இல்லாவிட்டாலும் உறுதியாக
நீ போகும் பாதையில்
மட்டுமல்ல
போகாத பாதையிலும்
காத்துக் கிடக்கிறது
உனக்காக என் மனசு
எல்லைமீறிய கோபத்திலும்
கையிலிருக்கும் செல்போனை
விட்டெறிய கூடாது
என்றிருக்கும் நிதானம்
வார்த்தைகளில்
இருப்பதில்லை நம்பலருக்கும்
உணர்வுகளை
அடக்கி வாழ்வதே
உண்மையான வலிமை
சிந்தனை சரியான
வழியில் இருந்தால்
வாழ்க்கை தானாகவே நகரும்
பத்து திங்கள் தாய்
பட்ட வேதனையை
தாய்க்கும் பிள்ளைக்குமாய்
ஆயுள் வரை தாங்கிடும்
ஓரே உயிர் அப்பா
இகழ்ச்சியை கண்டு
மனம் தளராமல்
புகழ்ச்சியை கண்டு
மனம் மயங்காமல்
எந்நிலையிலும்
தன்னிலை மாறாமல்
இருப்பதே சிறப்பு
முதிய மரங்களை வெட்டாதே
அது நம் பாட்டன் பூட்டன்
வளர்த்த மரம் அவர்களுக்கு
பயன் தந்து இன்று நமக்கும்
பயன் தரும் மரம்
பிடித்ததோ
பிடிக்கலையோ
வேண்டுமோ
வேண்டாமோ
சகித்துக் கொண்டு
நாட்களைக்
கடத்த சொல்லித்
தருகிறது வாழ்க்கை
வீழ்வதை பொருட்படுத்தாதே
எழுவதே உன் உண்மையான பலம்
📖 பக்கம் 135 / 606
📋 Copied