எந்நிலையிலும்
நீ யாருக்கும்
தாழ்ந்தவரில்லை
எப்போதும் உன்னை
நீ உயர்ந்தயிடத்திலேயே
வைத்திரு

பணம் பணம்
என்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
மனதை நேசிக்கும்
உறவுகள் கிடைத்தால்
தொலைத்துவிடாதீர்கள்

உலகம் எவ்வளவு
வேகமாக சென்றாலும்
உன் மன அமைதியுடன்
நீ உன்னை முன்னேற்றிக்கொள்

எந்த உறவுகளும்
தூறலாய் இருக்கும் வரையே
ரசனைக்குரியது
அடைமழையாய் பிடித்துகொண்டால்
வெறுப்புக்குள்ளாகி விடும்

சிறிய ஒரு விளக்கே
இருள் நிறைந்த அறையை
ஒளியூட்டும்
அத்தகைய சிறிய நம்பிக்கையே
வாழ்வை மாற்றும்

மனதோடு
அழ பழகிக்கொள்
கண்ணீரும் அடங்கிவிடும்

தொடவே முடியாத
தொலைவில் இருப்பதை
தொடுவானம் என்கின்றோம்
அருகில் இருக்கும்
வெற்றியை மட்டும்
தொலைவில் உள்ளது என்கின்றோம்

கண்ணீரால் நனைந்த மனசு தான்
மிக வலிமையான
சிரிப்பை உருவாக்கும்

வாழ்க்கை என்பது
ஒரு கலை
அதை எப்படி
உருவாக்குவது என்பது
உன் கையில் உள்ளது
உன் எண்ணங்கள்,
உன் செயல்கள்
உன் வாழ்வின்
வடிவத்தை நிர்ணயிக்கும்

ரொம்ப சிந்திச்சா
மனசு வலிக்கும்
அப்புறம்
தலை வலிக்கும்
வாழ்க்கையையும்
மனுஷங்களையும்
அவங்க அவங்க
போக்கிலேயே விட்டுறணும்
அதான் நமக்கு நல்லது