கடந்து செல்ல
கற்றுக்கொள்
உன்னை
குறை கூறுபவர்கள்
யாவரும்
உத்தமர் இல்லை என்பதை
நினைவில் வைத்து

What's next (அடுத்து என்ன)?

என்பதில் வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கிறது

சிலரின் அன்பு போலவே
சில கனவுகளும் நிஜமாகாது

வான்வெளியில்
மாயம் நிகழ்ந்தது
மழை பெய்தது
மண் மலர்ந்தது
கார்மேகம் கண்ட
மயில் போல
என் மனம் மகிழ்ந்தது
(மழை)

காலம் மாறும் என
கற்பனையில் காத்திருக்காதே
நீ முயற்சி செய்யாமல்
இங்கு எதுவும் மாறாது

நான் தனியாகவே
நடக்கிறேன் நடுவழியில்
விட்டு விலகும்
மனிதர்களோடு
பயணிப்பதற்கு
தனிமையில்
நடப்பதே நல்லது

தொலை தூரத்தில்
இருந்தாலும்
நமது நினைவுகளை
தொலைக்காமல் இருப்பவர்களே
உண்மையான உறவுகள்

கண்டஇடத்திலும்
கொட்டக்கூடாதது
குப்பைகள் மட்டுமல்ல
நம் வீட்டுப்பிரச்சனைகளையும் தான்

எண்ணம் உறுதியாக
இருந்தால் எண்ணியபடி
உயரலாம் நமது எண்ணம்
தான் நம்முடைய
எதிர்காலத்தை உருவாக்குகிறது

நான் கரை தேடும்
ஓடம் என்னில்
பயணம் செய்ய
நினைக்காதே நீயும்
தொலைந்து போவாய்
என்னைப் போல்