இந்த உலகில் எதிரியிடம்
தோற்றவர்களை விட
நிழல் போல் கூட இருந்து
நட்பு என்ற பெயரில்
பலவீனம் படுத்திய
துரோகியிடம்
தோற்றவர்களே அதிகம்
உலகத்தை நேசி
ஒருவரையும் நம்பாதே
கரையும் மெழுகில்
இருளை கடந்துவிடமுடியும்
என்ற நம்பிக்கை
வாழ்க்கையிலும்
இருக்கட்டும்
தொலைவுக்கு பயந்தால்
நடை நடப்பதே முடியாது
அளவோடு
இருந்திருக்கலாமோ என்பது
அடிபட்டு மிதிப்பட்டு
அவமானப்பட்ட பின் தான்
புரிகின்றது
வாழ்க்கை
முடியும் வரையிலும்
ஒரு புதிராகவே இருக்கிறது
வாழ்க்கை சரியாக
இருக்க வேண்டியதில்லை
நேர்மையாக இருந்தால் போதும்
பிரிந்து செல்லும் முன்
ஏன் என்ற காரணத்தை
சொல்லிவிட்டு போங்க
அப்போது தான்
நான் நிம்மதியாக
இருக்க முடியும்
முடியாது என்று
எதையும் விட்டுவிடவேண்டாம்
முயற்ச்சிசெய்தால்
நம்மால் முடியாது
என்று எதுவும் இல்லை
மனவலிமையை விட
மன உறுதியே பெரிது
எவை வேண்டும்
எவை வேண்டாமென
முடிவெடுப்பதில்
நல்ல எண்ணங்களுக்கு
கமா போட்டிடுங்கள்
தீய எண்ணங்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே
📖 பக்கம் 132 / 606
📋 Copied