ஒருவரின் வெற்றி
உனக்கு ஏமாற்றமாக இருந்தால்
நீ இன்னும் உன்னையே
நம்பவில்லை என்பதற்கான சான்று
புதிய முயற்சி தோல்வியடையலாம்
ஆனால் முயற்சிக்கவே இல்லையெனில்
வாழ்கை வெற்றி அடையாது
சில பார்வைகள் புன்னகைக்கின்றன
ஆனால் அந்த பின்னணியில்
அழுகை ஒலிக்கிறது
தனித்து இருப்பவர்கள்
எப்போதும்
தனியாக இருப்பதில்லை
பிடித்த ஒருவரின்
நினைவுகளோடு
தான் இருப்பார்கள்
ஒவ்வொரு நாளும்
புதியதாய் மலர்வது
பூக்கள் மட்டுமல்ல
நம் மனங்களும் தான்
நல் எண்ணம் விதைப்போம்
நலமாக மகிழ்வாக வாழ்வோம்
விழுந்து விழுந்து சிரியுங்கள்
ஆனால் விழுந்தவனைப்
பார்த்து சிரிக்காதீர்கள்
நம்பிக்கையுடன்
பயணித்து கொள்ளுங்கள்
தானாய் தோன்றி
தானாய் மறையும்
விமர்சனங்கள் எல்லாம்
பாதி வழியில்
நீங்கி போபவையே
கடந்து போகட்டும்
என காத்திருப்பதை விட
காலத்தோடு போட்டி போட்டு
முன்னேறுவதே சிறந்தது
அன்புக்கு விலை
என்றைக்குமே அன்பாக
தான் இருக்க முடியும்
அதனால் தான் அதை
வாங்கவும் விற்கவும்
முடிவதில்லை
இன்பத்திலும் சரி
துன்பத்திலும் சரி
சகிப்புத்தன்மை
இருந்தால் வாழ்க்கை
அழகாய் இருக்கும்
📖 பக்கம் 131 / 606
📋 Copied